மஹாசிவராத்ரி பூஜை மாசி.14 – 26/2/2025 அன்று இரவு முதல்காலம் பூஜை7:00 மணிக்கு, இரண்டாம் காலபூஜை இரவு 10:00 மணிக்கு, மூண்றாம்காலபூஜை இரவு.1:00மணிக்கு, நான்காம்காலபூஜை அதிகாலை 3:00மணி. மீண்டும் 5.00 மணிக்கு அமாவாசை பூஜை ஆரம்பமாக உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு அருள்மிகு கடையீஸ்வரரின் அருளைபெருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிரது.
சிவராத்திரி விரத வகைகள்
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
- நித்திய சிவராத்திரி
- மாத சிவராத்திரி
- பட்ச சிவராத்திரி
- யோக சிவராத்திரி
- மகா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்
முதல் யாமம்
- வழிபட வேண்டிய மூர்த்தம் – சோமாஸ்கந்தர்
- அபிஷேகம் – பஞ்சகவ்யம்
- அலங்காரம் – வில்வம்
- அர்ச்சனை – தாமரை, அலரி
- நிவேதனம் – பால் அன்னம்,சக்கரைபொங்கல்
- பழம் – வில்வம்
- பட்டு – செம்பட்டு
- தோத்திரம் – இருக்கு வேதம் , சிவபுராணம்
- மணம் – பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
- புகை – சாம்பிராணி, சந்தணக்கட்டை
- ஒளி– புட்பதீபம்
இரண்டாம் யாமம்
- வழிபட வேண்டிய மூர்த்தம் – தென்முகக் கடவுள்
- அபிஷேகம் – பஞ்சாமிர்தம்
- அலங்காரம் – குருந்தை
- அர்ச்சனை – துளசி
- நிவேதனம் – பாயசம், சர்க்கரைப் பொங்கல்
- பழம் – பலா
- பட்டு – மஞ்சள் பட்டு
- தோத்திரம் – யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
- மணம் – அகில், சந்தனம்
- புகை – சாம்பிராணி, குங்குமம்
- ஒளி– நட்சத்திரதீபம்
மூன்றாம் யாமம்
- வழிபட வேண்டிய மூர்த்தம் – இலிங்கோற்பவர்
- அபிஷேகம் – தேன், பாலோதகம்
- அலங்காரம் – கிளுவை, விளா
- அர்ச்சனை – மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
- நிவேதனம் – எள்அன்னம்
- பழம் – மாதுளம்
- பட்டு – வெண் பட்டு
- தோத்திரம் – சாம வேதம், திருவண்டப்பகுதி
- மணம் – கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
- புகை – மேகம், கருங் குங்கிலியம்
- ஒளி– ஐதுமுக தீபம்
நான்காம் யாமம்
- வழிபட வேண்டிய மூர்த்தம் – சந்திரசேகரர்(இடபரூபர்)
- அபிஷேகம் – கருப்பஞ்சாறு, வாசனை நீர்
- அலங்காரம் – கரு நொச்சி
- அர்ச்சனை – நந்தியாவட்டை
- நிவேதனம் – வெண்சாதம்
- பழம் – நானாவித பழங்கள்
- பட்டு – நீலப் பட்டு
- தோத்திரம் – அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
- மணம் – புணுகு சேர்ந்த சந்தணம்
- புகை – கர்ப்பூரம், இலவங்கம்
- ஒளி– மூன்று முக தீபம்
இவ்விரதம் பற்றிய ஐதீகங்கள்
இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.
Discover more from அருள்மிகு காடையீஸ்வரர் திருக்கோவில்
Subscribe to get the latest posts sent to your email.