மூலவர் : காடைஈஸ்வரர்
தயார் : பங்கசாஷி
தல அதிசயம் : வெடத்தலாமரத்தில் தளிர்கள் துளிர்த்தன
பழமை : 700 ஆண்டுகளுக்கு மேல்
ஊர் : காடையூர் – காங்கேயம்
மாவட்டம் : திருப்பூர்
இக்கோவிலில் சிவபெருமான் – காடைஈஸ்வரனாகவும், அம்மன் – பங்கசாஷி அம்மனாகவும் அருள்பாலிக்கின்றனர். இந்த கோவிலில் “காடையூர் நடராஜர்” சன்னதி மற்றும் வெள்ளையம்மாள் சன்னதி ஆகியவை மிகவும் பிரசித்திபெற்ற சன்னதிகள் ஆகும்.
பிரதாசம் பூஜை, சித்ரா பௌர்ணமி, தமிழ் புத்தாண்டு ஆகிய நாட்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
கருவூர் சித்தர் இங்கு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அவர் திருவிசைப்பாக்களில் இறைவனைப் பாடியுள்ளார். கருவூரர் லிங்கத்துடன் இறைவனோடு தன்னைத்தானே கரைத்துக் கொண்டார் என திருஞானசம்பந்தர் தேவாரத்தில் பாடியுள்ளார்.